உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா! ஜெயித்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே

1. கல்லறை திறந்திடவே கடும் சேவகர் தேடுவாரோ?
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே

2. மரித்தவர் மத்தியில் ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே

3. எம்மா ஊர் சீடர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே

4. மரணமுன் கூர் எங்கே? பாதாள முன் ஜெயமெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே

5. ஆவியால் இன்றும் என்றும் ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே

6. பரிசுத்தமாகுதலை பயத்தோடேன்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோம் மகிமையிலே – உயிர்த்தெழுந்தாரே



uyirththezhunththare alleluya! jayiththezhunththare

uyirththezhunththare alleluya! jayiththezhunththare
uyirutan ezhunthdha meedpar iyesen sonthdhamanare

1. kallarai thiranththitave kadum sevakar theduvaro?
vallavar iyesu uyirththezhunththare
valla bithavin seyalithuve – uyirththezunththare

2. marithdhavar maththiyil jeeva thevanaith theduvaro?
neethiyin athipathi uyirththezhunththare
niththiya nambikkai berukiduthe – uyirththezunththare

3. emma uur seetarkalin ella mana irul neekkinare
emmanak kalakkangkal nakkinathale
ellaiyillab paramananthdhame – uyirththezunththare

4. maranamun kur engke? pathala mun jayamengke?
savaiyum noiyaum beyaiyum jayiththar
sabaiyore thuthi sarriduvom – uyirththezunththare

5. aaviyal inrum enrum aa! emmaiyum uyirbbikkave
aaviyin acharam emakkaliththare
alleluya thuthi satrriduvom – uyirththezunththare

6. parisuthdhamakudhalai payaththodenrum kaththukkolvom
ekkalam thonikkaiyil marurupamaka
ezhumbuvom makimaiyile – uyirththezhunththare